Header Ads

🔴 பரிசில் டீசல் வரலாறு காணாத விலை உயர்வு!



எரிபொருளுக்கான விலை தொடர்ச்சியாக அதிகரித்தே செல்கின்றது. சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின் படி, கடந்த ஒருவருடத்தில் 28% வீதத்தால் டீசலின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு முன்னர் எப்போதுமே பிரான்ஸ் சந்தித்ததில்லை.

டீசலின் விலை கடந்த வெள்ளிக்கிழமை முதல் பாரிய விலை அதிகரிப்பை சந்தித்துள்ளது. சராசரியாக ஒரு லிட்டர் டீசலின் விலை €1,5354 யூரோக்களுக்கு விற்பனையாகின்றது. இது கடந்த வருடத்தை விட 28% வீதத்தால் அதிகமாகும்.

ஒக்டோபர் 12, 2018 ஆம் ஆண்டு அதிகபட்சமாக €1,5331 யூரோக்களுக்கு டீசல் விற்பனையாகியிருந்தது. ஆனால் அதன் பின்னர் தொடர்ச்சியாக விலை குறைவடைந்தே வந்திருந்தது. 2020 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி அன்று ஒரு லிட்டர் டீசலின் விலை €1,15778 யூரோக்களுக்கு விற்பனையாகியிருந்தது.

SP95 பெற்றோலின் விலையும் அதிகரித்துள்ளது. தற்போது SP95 பெற்றோல் ஒரு லிட்டர் €1,6332 யூரோக்களுக்கு விற்பனையாகின்றது. 2012 ஆம் ஆண்டின் பின்னர் இந்த அதிகபட்ச விலையேற்றத்தை பிரான்ஸ் தற்போது சந்தித்துள்ளது.  

*🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷*

*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*

............................................................

பிரான்ஸில் இருந்து  தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம்  தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

 தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு  subscribers பண்ணுங்கள் !!*

உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .

👇

https://www.youtube.com/c/THAAIMAN

*நன்றி*



No comments

Powered by Blogger.