Header Ads

🔴 கடைசி ‘விடுதலையின் தோழன்’ உயிரிழப்பு! - தேசிய அஞ்சலிக்கு ஏற்பாடு..!



‘விடுதலையின் தோழன்’ (compagnon de la Libération) என பெருமைப்படுத்தப்பட்ட வீரர்களின் கடையாக இருந்த Hubert Germain இன்று சாவடைந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை ஒக்டோபர் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இராணுவ அமைச்சர் Florence Parly இதனை அறிவித்துள்ளர். Hubert Germain தனது 101 ஆவது வயதில் சாவடைந்துள்ளார்.

“இதனை நான் உங்களுக்கு அறியத்தருகின்றேன். ‘விடுதலையின் வீரர்களில் இறுதியாக வாழ்ந்த Hubert Germain மறைந்துள்ளார். இது எங்கள் வரலாற்றில் மிக முக்கிய தருணம்.” என இராணுவ அமைச்சர் தெரிவித்தார்.

1038 வீரர்களுக்கு மாத்திரமே இந்த பெருமைமிகு compagnon de la Libération எனும் கெளரவம் வழங்கப்பட்டிருந்தது. அதில் இறுதியாக வாழ்ந்தவரே Hubert Germain ஆவர்.

இவருக்கு தேசிய அஞ்சலி நிகழ்வு வரும் நவம்பர் 11 ஆம் திகதி இடம்பெற உள்ளது. Arc de Triomphe இல் அஞ்சலி நிகழ்வு நிறைவடைந்ததும் அவரது உடல் Mont Valérien இல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

*🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷*

*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*

............................................................

பிரான்ஸில் இருந்து  தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம்  தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

 தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு  subscribers பண்ணுங்கள் !!*

உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .

👇

https://www.youtube.com/c/THAAIMAN

*நன்றி*



No comments

Powered by Blogger.