Header Ads

முகக்கவசம் நீக்கம்! - இல் து பிரான்சுக்குள் முதல் பாடசாலை!

 


இல் து பிரான்சுக்குள் உள்ள ஒரு மாவட்டம் உட்பட 12 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் முகக்கவசம் நீக்கப்பட உள்ளது.

பாடசாலைகளில் மாணவர்கள் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். கொரோனா தொற்றின் தீவிரம் படிப்படியாக குறைவடைந்து வருகின்றதை அடுத்து, பல மாவட்டங்களில் பகுதி பகுதியாக இந்த ‘கட்டாய முகக்கவசம்’ நீக்கப்பட்டு வருகின்றது. இதில் ஒரு பகுதியாக வரும் திங்கட்கிழமை ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் மேலும் 12 மாவட்டங்கள் இந்த பட்டியலில் இணைக்கப்பட உள்ளன.

இந்த 12 மாவட்டங்களில் இல் து பிரான்சுக்குள் உள்ள Seine-et-Marne மாவட்டம் உள்ளது. இல் து பிரான்சுக்குள் உள்ள ஒரே மாவட்டம் இதுவாகும். இங்கு தொற்று வீதம் ஒவ்வொரு 100.000 பேருக்கும் 48 பேருக்கு மாட்டுமே ஏற்படுகின்றது.

முன்னர் அரசு அறிவித்ததன் படி 100.000 பேரில் 50 பேருக்கும் குறைவாக தொற்று ஏற்படும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் மாத்திரமே முகக்கவசம் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக 79 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் முகக்கவசத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளன. அவற்றில் 12 மாவட்டங்கள் புதிதாக இணைப்பட்டுள்ளன.

 *🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*

............................................................

பிரான்ஸில் இருந்து  தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம்  தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

 தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு  subscribers பண்ணுங்கள் !!*

உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .

👇

https://www.youtube.com/c/THAAIMAN

*நன்றி*


No comments

Powered by Blogger.