பாடசாலையில் பொருத்தப்பட்ட ‘சறுக்கு’ விளையாட்டு அமைப்பினால் சர்ச்சை!
பரிசில் உள்ள சிறுவர் பாடசாலை ஒன்றில் ஆபாசமான சறுக்கு விளையாட்டு அமைப்பு பொருத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்ட இந்த புகைப்படம் மிக வேகமாக இணையமெங்கும் பரவியது. பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோவினை குறிப்பிட்டு, இணையவாசி ஒருவர் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் பெண் அந்தரங்க உறுப்பு போன்று அமைக்கப்பட்ட குழந்தைகள் விளையாடும் சறுக்கு விளையாட்டு அமைப்பு ஒன்று அமைந்துள்ளது. அது பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் உள்ள தனது மகள் கல்வி பயிலும் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது அவசியம் தேவைதானா எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
உண்மை தன்மை எதுவும் ஆராயப்படாமல் சில நிமிடங்களில் இந்த புகைப்படம் இணையத்தில் தீ போல் பரவியது. பலர் தங்களது கோபத்தினையும், கடுமையான விமர்சனத்தையும் பகிர்ந்திருந்தனர்.
ஆனால் இந்த புகைப்படம் பரிசில் எடுக்கப்பட்டதில்லை என பின்னர் உறுதி செய்யப்பட்டது. கனடாவில் உள்ள பாடசாலை ஒன்றில் சினிமா காட்சி ஒன்றுக்காக அவ்வாறு அமைக்கப்பட்டது எனவும் உறுதி செய்யப்பட்டது.
இதுபோன்ற விளையாட்டு அமைப்புகள் எதுவும் பரிசில் அமைக்கப்படவில்லை எனவும் பரிஸ் நகரசபை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷*
*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*
............................................................
பிரான்ஸில் இருந்து தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம் தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.
தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு subscribers பண்ணுங்கள் !!*
உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .
👇
https://www.youtube.com/c/THAAIMAN
*நன்றி*
No comments