Header Ads

கிராமம் முழுவதும் வெடிகுண்டுகள்- நான்கு நாட்கள் வெளியேற்றப்படும் கிராம மக்கள்..!



கிராமம் ஒன்றில் பரவலாக வெடிகுண்டுகள் நிறைந்திருப்பதால், நான்கு நாட்களுக்கு ஒட்டுமொத்த கிராம மக்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Aisne நகரில் இச்சம்பவம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்குள்ள Levergies எனும் சிறு கிராமத்தில் இந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கு முதலாம் உலகப்போரைச் சேர்ந்த 1,500 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த எடை 28 தொன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டுகளை அகற்றி செயலிழக்கச் செய்யும் பணி இன்று ஒக்டோபர் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறைந்தது நான்கு நாட்கள் (ஒக்டோபர் 15) ஆம் திகதி வரை அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு ஊர்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 550 பேர் மொத்தமாக வெளியேற்றப்பட உள்ளனர்.

மண்ணுக்குள் புதைந்த இந்த வெடிகுண்டுகள் ஜெர்மன் நாட்டில் தயாரிக்கப்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷*

*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*

............................................................

பிரான்ஸில் இருந்து  தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம்  தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

 தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு  subscribers பண்ணுங்கள் !!*

உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .

👇

https://www.youtube.com/c/THAAIMAN

*நன்றி*



No comments

Powered by Blogger.