சாமுவேல் பற்ரியின் புகைப்படத்துடன் இரு ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல்!
கடந்தவருடம் வரலாற்று பேராசியர் சாமுவேல் பற்ரி பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. தற்போது இரு ஆசிரியர்களுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மார்செ நகரில் உள்ள Henri-Wallon கல்லூரியில் பணிபுரியும் இரு ஆசிரியர்களுக்கே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 8 ஆம் திகதி அவர்களுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் “உங்களது இறுதி நாட்கள் இது. அடுத்த வாரம் நீங்கள் செத்திருப்பீர்கள்!” என எழுதப்பட்டிருந்தது. அத்தோடு, குறித்த கடிதத்தோடு பேராசிரியர் சாமுவேல் பற்ரியின் புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து, இரு ஆசிரியர்களும் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். உள்ளூர் அரசவழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
“ஒட்டுமொத்த தென் பகுதி மக்கள் சார்பாகவும் நான் எனவும் மொத்த ஆதரவையும் இரு ஆசிரியர்களுக்கும் அளிக்கின்றேன்!” என Provence-Alpes-Côte-d'Azur மாகாண முதல்வர் Renaud Muselier தெரிவித்துள்ளார்.
*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*
............................................................
பிரான்ஸில் இருந்து தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம் தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.
தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு subscribers பண்ணுங்கள் !!*
உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .
👇
https://www.youtube.com/c/THAAIMAN
*நன்றி*
No comments