தடுப்பூசி போட்டவர்கள் - போடாதவர்கள்! - ஆய்வில் வெளியான அதிர்ச்சி முடிவுகள்!
கொரோனா வைரஸ் தொடர்பில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சில ‘அதிர்ச்சிகரமான’ செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களோடு ஒப்பிடுகையில்…. தடுப்பூசி போட்டுகொள்ளாதவர்களுக்கு எட்டு மடங்கு ‘தொற்று ஏற்பட’ வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் ஒவ்வொரு 100.000 பேருக்கும் 19 பேர் தொற்றுக்குள்ளாகின்றனர். அதேவேளை தடுப்பூசி போடாதவர்கள் ஒவ்வொரு 100.000 பேருக்கு 160 பேர் தொற்றுக்குள்ளாகின்றனர்.
அதேவேளை, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு 6 மடங்கு அதிகமாக மரணம் சம்பவிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒக்டோபர் 1 ஆம் திகதி பதிவான கொரோனா தொற்று மற்றும் சாவு விபரங்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை 16 ஆம் திகதியின் பின்னர் முதன்முறையாக தற்போது 5.000 இற்கும் குறைவான நாளாந்த தொற்று பதிவாகியுள்ளது. இன்றைய தினம் 4,935 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் தற்போது 7,410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு வாரத்திற்கு முன்பாக இந்த எண்ணிக்கை 8,107 ஆக இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்றைய தினம் 1,414 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 1,355 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 47 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 116,760 பேராக அதிகரித்துள்ளது.
*பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்
* உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்*
............................................................
பிரான்ஸில் இருந்து தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம் தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.
தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு subscribers பண்ணுங்கள் !!*
உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஓப்படைக்கின்றோம் .
நன்றி
No comments