இன்று முதல் : பிரான்சில் இருந்து பிரித்தானியா செல்ல அடையாள அட்டை மட்டும் போதாது!
பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்குச் செல்ல, அடையாள அட்டை மட்டும் போதாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் இந்த சட்டத்தை பிரித்தானியா அமல் படுத்தியுள்ளது. பிரான்சில் இருந்து நீங்கள் பிரித்தானியா செல்வதற்கு உங்களுக்கு கண்டிப்பாக கடவுச்சீட்டு (passeport) வேண்டும். நீங்கள் பிரித்தானிய குடியுரிமையாளராக இருந்தாலே ஒழிய, வேறு எந்த ஐரோப்பிய நாட்டு குடியுரிமை கொண்டிருந்தாலும் கட்டாயமாக கடவுச்சீட்டு வேண்டும்.
பிரான்சில் அடையாள அட்டை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால் கடவுச் சீட்டு பெற்றுக்கொள்ள பெரியவர்களுக்கு €68 யூரோக்களும், சிறுவர்களுக்கு €42 யூரோக்களும் 15-17 வயதுக்குட்பட்டவர்களுக்கு €17 யூரோக்களும் கட்டணமாக அறவிடப்படும்.
கொரோனா வைரசினால் பிரித்தானியாவில் சுற்றுலாப்பயணிகள் வரத்து குறைவடைந்திருந்த நிலையில் தற்போது இந்த நடைமுறையால் மேலும் பயணிகள் வரத்து வீழ்ச்சியடையும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
*பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்
* உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்*
............................................................
பிரான்ஸில் இருந்து தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம் தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.
தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு subscribers பண்ணுங்கள் !!*
உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஓப்படைக்கின்றோம் .
நன்றி
No comments