ஒரே வருடத்தில் பரிசை விட்டு வெளியேறிய 6000 மாணவர்கள்!
பரிசில் இருந்து 6000 மாணவர்கள் வெளியேறியுள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய கல்வி ஆண்டில் கிட்டத்தட்ட 6000 மாணவர்கள் குறைவாக பாடசாலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தலைநகர் பரிசில் கொண்டுவரப்பட்ட இறுக்கமான உள்ளிருப்பு மற்றும் 'வீட்டில் இருந்து பணி செய்ய கொண்டுவரப்பட்ட திட்டத்தில் வருவாய் இழப்பை சந்தித்த பெற்றோர்கள் பலர் பரிசை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 9 ஆம் 10 ஆம் மற்றும் 11 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் பல மாணவர்கள் பாடசாலைக்கு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2020 ஆம் ஆண்டின் புதிய கல்வி ஆண்டில் 3,723 மாணவர்கள் பரிசை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பரிசில் வாழ்க்கைத் தேவைக்கான செலவு அதிகரித்துள்ளமையும், கொரோனா தொற்று தீவிரம் ஆகிய இரு காரணங்களுமே இந்த வெளியேற்றங்களுக்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
*🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷*
*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*
............................................................
பிரான்ஸில் இருந்து தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம் தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.
தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு subscribers பண்ணுங்கள் !!*
உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .
👇
https://www.youtube.com/c/THAAIMAN
*நன்றி*
No comments