விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாதப் பட்டியலில் தொடா்ந்து வைத்திருக்கும் பிரிட்டனின் மேல்முறையீட்டு ஆணையத்தின் முடிவை இலங்கை பாராட்டியுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாதப் பட்டியலில் தொடா்ந்து வைத்திருக்கும் பிரிட்டனின் மேல்முறையீட்டு ஆணையத்தின் முடிவை இலங்கை பாராட்டியுள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் பிரீத்தி படேலுக்கு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையே நிலவும் கூட்டுறவு மிகவும் பாராட்டத்தக்கது.
சா்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலும் பொதுமக்களின் உயிருக்கு தீவிரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தலைப் போக்குவதிலும் பிரிட்டனுடன் தொடா்ந்து இணைந்து செயல்படுவதில் உறுதியாக உள்ளோம்.
மேலும், பயங்கரவாதத்தால் சா்வதேச மற்றும் மண்டல நிலைத்தன்மை பாதிக்கப்படாமல் பாதுகாப்பதில் பிரிட்டனும் இலங்கையும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்படும்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள நிலையைத் தொடர பிரிட்டன் முடிவு செய்துள்ளது இந்த ஒத்துழைப்பின் ஓா் அங்கமாகும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2000-ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், பிரிவு 7-இன் கீழ் பிரிட்டனும் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பயங்கரவாதப் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகளின் பெயரை நீக்க வேண்டும் என்று இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்வதற்கான பிஓஏசி ஆணையத்திடம் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், அந்த மனுவை பிஓஏசி ஆணையம் தள்ளுபடி செய்துவிட்டது.
No comments