Header Ads

தலீபான்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்: ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தல்

 


தலீபான்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியமாகும் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய யூனியனுக்கான வெளியுறவுக் கொள்கை தலைவர் போர்ரெல் இது குறித்து கூறியதாவது: – ஆப்கானிஸ்தான் மக்களை ஆதரிப்பதற்காக ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட தயராக உள்ளோம். 

தலீபான்கள் அரசின் செயல்பாடுகளை பொருத்து அவர்களுடனான தொடர்பு அதிகப்படுத்தப்படும். ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கம் கண்டிப்பாக பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கக் கூடாது. மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதோடு, சட்டம் ஒழுங்கு மற்றும் சுதந்திரமான ஊடகங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். பிற அரசியல் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றார். 

No comments

Powered by Blogger.