Header Ads

உலக செய்திகள் நியூசிலாந்தில் பயங்கரம்: கத்தி குத்து தாக்குதலில் 6 பேர் காயம்

 

வெல்லிங்டன்,

நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லந்து நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் இன்று (வெள்ளிக்கிழமை) நுழைந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர், அங்கிருந்த ஆறு பேரை சரமாரியாக குத்தினார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரை சுட்டு வீழ்த்தினர். காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்தில் அவர் இருந்துவந்தது தற்போது தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், “கடந்த 2011ஆம் ஆண்டு, இலங்கையைச் சேர்ந்த அந்த நபர் நியூசிலாந்துக்கு வந்தார். பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் அவர் இருந்துள்ளார். ஆக்லாந்து நகர்ப்புற பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்ற அவர் அங்கிருந்து கத்தியை எடுத்து மக்களை சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதில், ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளார். அவரை கண்காணித்துவந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். காயம் அடைந்தவர்களில் மூன்று பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஐஎஸ் இயக்கத்தால் கவரப்பட்ட அந்த நபர், இந்த வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளார்” என்றார். 

No comments

Powered by Blogger.