தேசிய செய்திகள் இந்தியாவில் 42,618 பேருக்கு கொரோனா: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 618 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 29,322 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,29,45,907 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 330 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,40,225 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 36,385 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,21,00,001 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.43 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 4,05,681 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 67,72,11,205 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58,85,687 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
No comments