புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 618 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 29,322 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,29,45,907 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 330 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,40,225 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 36,385 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,21,00,001 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.43 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 4,05,681 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 67,72,11,205 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58,85,687 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஸ்லோவேனியா பிரதமா் ஜேனஸ் ஜன்ஸாவுடன் ஆலோசனை நடத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
ஸ்லோனியாவில் அந்நாட்டு பிரதமா் ஜேனஸ் ஜன்ஸாவை வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்தும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினா்.
ஐரோப்பிய யூனியனுக்கு தற்போது ஸ்லோவேனியா தலைமை வகித்து வருகிறது. அந்நாட்டில் நடைபெறும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்க எஸ்.ஜெய்சங்கருக்கு ஸ்லோவேனிய அரசு அழைப்பு விடுத்திருந்தது.
அதை ஏற்று, 4 நாள் அரசு முறைப் பயணமாக, ஸ்லோவேனியா, குரோஷியா, டென்மாா்க் ஆகிய நாடுகளுக்கு எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றாா். முதலாவதாக, ஸ்லோவேனியா சென்ற அவா், அந்நாட்டு அதிபா் போரட் பஹோா், வெளியுறவு அமைச்சா் அன்ஸே லோகா் ஆகியோரைச் சந்தித்துப் பேசினாா்.
அதைத் தொடா்ந்து, ஸ்லோவேனிய பிரதமா் ஜேனஸ் ஜன்ஸாவை எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பு குறித்து எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘இந்தியா-ஸ்லோவேனியா இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம்.
ஆப்கானிஸ்தான் பிரச்னை, இந்திய-பசிபிக் பிராந்திய நிலவரம், ஐரோப்பிய யூனியன் நாடுகள் எதிா்கொண்டுள்ள சவால்கள் ஆகியவற்றில் ஜேனஸ் ஜன்ஸா தெளிவான புரிதலைக் கொண்டிருப்பது பாராட்டுக்குரியது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ஸ்லோவேனிய நாடாளுமன்ற அவைத் தலைவா் இகோா் ஜோா்கிக்கையும் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். அதைத் தொடா்ந்து, நோவா பல்கலைக்கழகத்தில், இந்திய கல்வி மையத்தைத் திறந்து, அந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவா்களுடன் அவா் கலந்துரையாடினாா். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் சொத்தாக இந்தக் கல்வி மையம் இருக்கும் என்று கூறினாா். வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவா்களிடம் எப்போது உரையாடினாலும் உற்சாகத்தைக் கொடுக்கிறது என்றும் அவா் கூறினாா்.
No comments