கோயிலாக்கண்டி கடற்கரையோரத்தில் (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)
கோயிலாக்கண்டி அல்லது கோவிலாக்கண்டி யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊர் ஆகும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தெற்கில் உள்ள உப்பாறு கடலேரியின் கரையில் அமைந்துள்ள இவ்வூரின் வடக்கில் கைதடியும், கிழக்கில் கைதடி நாவற்குழிப் பகுதிகளும், தெற்கில் கடலேரியும், மேற்கில் நாவற்குழி கிழக்குப் பகுதியும் உள்ளன.
நாவற்குழியில் இருந்து பூநகரி நோக்கிச் செல்லும் வீதி இவ்வூரின் ஊடாகச் செல்கிறது. குடாநாட்டினூடாகச் செல்லும் தொடர்வண்டிப் பாதையும் இவ்வூரை அண்டிச் செல்கிறமை சிறப்பம்சம் ஆகும்.
No comments