கடலுக்கு நடுவில் அமைந்துள்ள ஆலயம் - சாளம்பன் தீவு
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கச்சாய் துறைமுகத்தில் இருந்து இரண்டு கிலோமீற்ரர் கடல் தூரத்தில் இத்தீவு அமைந்துள்ளது. மிகவும் சிறிய நிலப்பரப்பாக இத்தீவு காணப்படுகிறது. இங்கு மக்கள் வசிப்பதில்லை. இருப்பினும் இங்கு மிகவும் அழகிய நிலையில் அமைக்கப்பட்ட மாயவனின் ஆலயம் உண்டு. இவ்வாலயம் சாளம்பன் தீவு பெரும்படை ஆலயம் என அழைக்கப்படும். கச்சாய் பிரதேசத்தில் வசிக்கின்ற மக்களால் இவ்வாலயம் பராமரிக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெறுகின்றது.
No comments