Header Ads

தாளை மரங்களுக்கிடையில் கண்டெடுத்த அம்மன் சிலை கல்வயல் துர்க்கை அம்மன் கோயில்


இலங்கையின் வடக்கே சைவமும் தமிழும் தழைத்தோங்கும் யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரியில் மட்டுவிலுக்கும் கல்வயலுக்கும் இடையே காணப்படும் விளைவேலி தாளையம்பதி எனும் இடத்தில் இத்துர்க்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பும் அடியவர்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளிக்கொடுக்கும் நாயகியாக அம்பாள் விளங்குகின்றாள். மூன்று தேர்களை கொண்ட ஆலயமாக இது காணப்படுகின்றது. தாளைமரங்கள் சூழ்ந்த பகுதியிலுந்து இந்த அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டு எழுந்தருளி விக்கிரகமாக ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின் தலவிருட்சம் தாளையாகும். இவ்வாலயத்தில் திருமணமாகத பெண்கள் வழிபட்டு அம்பாளின் திருவருளால் திருமணம் நிறைவேறியுள்ளது. பலர் அம்பாளின் திருவருளால் வெளிநாடுசென்றுள்ளனர். நோய்நீங்கப்பெற்றுள்ளனர். இன மத பேதமின்றி அனைவரும் அம்பாளை வழிபாட்டு அம்பாளின் திருவருளினை பெற்றுள்ளனர்.



No comments

Powered by Blogger.