Header Ads

'எக்ஸ்பிரஸ் பேர்ள்' கப்பல் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நட்டம்...எத்தனைக் கோடி தெரியுமா?


'எக்ஸ்பிரஸ் பேர்ள்' கப்பல் நிறுவனத்தால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட இலங்கை அரசு பலகோடி ரூபா பணத்தை செலுத்த இணக்கம் தெரிவித்தது.

'எக்ஸ்பிரஸ் பேர்ள்' கப்பல் நிறுவனம் ஆரம்ப கட்ட நட்ட ஈடாக 72 கோடி ரூபா வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை, சட்டமா அதிபரின் ஊடாக ஆரம்ப கட்ட நட்ட ஈடாக 4 கோடி அமெரிக்க டொலர் கேட்டிருந்த நிலையில், 36 இலட்சம் அமெரிக்க டொலர் வழங்க 'எக்ஸ் - பிரஸ் பீடர்ஸ்' நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

கப்பல் விபத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களுக்கு இந்தத் தொகை பங்கிடப்படவுள்ளது என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மீனவர்களின் நட்டஈடு கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து, 72 கோடி ரூபாவைப் பங்கிட்டுக் கொடுக்க அரச அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.  

No comments

Powered by Blogger.