இனி பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுமா? இராணுவத்தளபதி விளக்கம்
எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மற்றும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் இனிவரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட மாட்டாது என பரவும் செய்திகளில் உண்மை இல்லை எனவும் இராணுவதளபதி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இனி நாடளாவிய ரீதியிலான பயணக்கட்டுப்பாடுகள் ஒருபோதும் விதிக்கப்படாது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments