இலங்கையில் அதிக விலைக்கு கொரோனா தடுப்பூசி? சீன தூதரகம் விளக்கம்
அரச மருத்தாக்கல் கூட்டுத்தாபனம் அதிக விலைக்கு சினோபாம் தடுப்பூசியை கொள்வனவு செய்துள்ளதாக வெளியாகும் குற்றச்சாட்டை இலங்கையிலுள்ள சீன தூதரகம் நிராகரித்துள்ளது.
இலங்கையிலுள்ள சீன தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வேகமாக பகிர்ந்தளிப்பதற்காக சிறந்த நிறுவன விலையில் இலங்கைக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சினோபாம் தடுப்பூசி இலங்கை வழங்கப்பட்ட விலையை விடவும் குறைவான விலைக்கு பங்களாதேஷிற்கு வழங்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டையும் இலங்கையிலுள்ள சீன தூதரகம் நிராகரித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பங்களாதேஷிலுள்ள சீன தூதரகத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சமூக வலைத்தளங்களில் கூறப்படும் தடுப்பூசி விலைகள் தொடர்பான தகவல்கள் உண்மைக்கு புறம்பானதெனவும் தடுப்பூசி கொள்வனவு ஒப்பந்தம் இன்னும் நிறைவடையவில்லை எனவும் பங்களாதேஷ் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியாக்கப்படுகின்றமை தடுப்பூசி கொள்வனவு செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் உள சீன தூதரகம் அறிவித்துள்ளது
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments