Header Ads

கடற்கரைக்கு செல்லவேண்டாம்; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு


கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதையும் நீராடுவதையும் தவிர்க்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகியுள்ள பேர்ள் கப்பலினால் கடற்கரை பிரதேசத்தை தளமாக கொண்ட சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுக்கு ஏற்படவுள்ள பாதிப்புக்களை மேம்படுத்த முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன்படி பாணந்துறை தொடக்கம் - நீர்கொழும்பு வரையிலான கடற்கரையில் சுற்றுலா பயணிகள் ஒன்று கூடுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய கடற்பிரதேசங்களில் நிலைமை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் தற்போதைய நிலையில் கடற்கரை சுற்றுலாத்துறை தளத்தை தவிர்த்து ஏனைய சுற்றுலா தளங்களை சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் ஈர்ப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் எனவும்   சுற்றுலாத்துறை அமைச்சர்  தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதுவருட கொவிட் கொத்தணி வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு வெளிநாட்டு பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நள்ளிரவுடன் அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. சுற்றுலா சேவைத்துறையினை மீள கட்டியெழுப்பு ம் நோக்குடன் மாத்திரம் விமான நிலையங்கள் திறக்கப்படவில்லை என்பதுடன் ஏனைய தேவைகளை கருத்திற் கொண்டு விமான நிலையங்கள் திறக்கப்பட தீர்மானிக்கப்பட்டது.

எனினும் இலங்கை வரும் விமானமொன்றில் ஆகக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக காணப்பட வேண்டும். அத்துடன் நாட்டிற்குள் வரும் சுற்றுலா பயணிகள் கொவிட்-19 வைரஸ் ஒழிப்பு குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இலங்கைக்கு பெருமளவிலான சுற்றுலாப்பிரயாணிகள் வருகைத்தருவார்களா என்பது சந்தேகத்திற்குரியது என குறிப்பிட்ட அவர், ஏனெனில் இலங்கைக்கு பிரதானமாக சுற்றுலா பயணத்தில் ஈடுப்படும் நாடுகள் கொவிட் -19 தாக்கத்தினால் வார மற்றும் மாத கணக்கில் முடக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் புதுவருட கொவிட் கொத்தணி காரணமாக ஒரு சில நாடுகள் இலங்கைக்கு சுற்றுலாப் பிரயாணத்தை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளன. எனவே பூகோளிய மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொவிட் பெருந்தொற்றின் சவால்களில் இருந்து மீள பொறுமையுடன் செயற்படுவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக பாணந்துறை தொடக்கம் நீர்கொழும்பு வரையிலான கடற்கரை பகுதி பெருமளில் பாதிக்கப்பட்டுள்ளன. கப்பலில் இருந்து வெளியாகிய பொருட்கள் மற்றும் இரசாயன பதார்த்தங்கள் பாணந்துறை தொடக்கம் நீர்கொழும்பு வரையிலான கடற்கரை பகுதியில் தேங்கியுள்ளன.

இந்நிலையில் இப்பொருட்களை அகற்றுவதற்கான நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள. இதன் காரணமாக இக்கடற்கரை பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கை மாத்திரமல்ல சுற்றுலாத்துறை சேவையும் பாதிக்கப்பட்டுள்ளன. கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகளின் வருகை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன.

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.