கொரோனா தொற்றாளருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை வெற்றி!
வாகன விபத்தில் காயமடைந்த கொவிட் தொற்றாளர் ஒருவருக்கு களுத்துறை நாகொடை வைத்தியசாலையின் வைத்தியக் குழாமினர் வெற்றிகரமாக வாய் மற்றும் தாடை சத்திரசிகிச்சையொன்றை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 15 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது இடம்பெற்ற விபத்தில், குறித்த நபரின் முகத்தில் எலும்புகள் சிதைவடைந்துள்ளன. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 40 வயதான குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே கொவிட் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுமார் நான்கரை மணித்தியாலம் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments