Header Ads

ஜனாதிபதியைப் போன்றதொரு உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பதற்ற நிலை


 கொத்தலாவல தனியார் பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இன்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவ குழுக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளால் அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டது. நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடு தளர்த்தப்பட்டிருந்தாலும், நாட்டில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்தடுப்பு சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய மக்கள் ஒன்றுக் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் , இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமையால் இந்த முரண்பாடு ஏற்பட்டது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இவ் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொத்தலாவல தனியார் பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐம்பதுக்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் ஜனாதிபதியைப் போன்ற உருவ பொம்மையொன்றுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த உருவ பொம்மையை மாணவர்கள் எரிக்க முற்பட்ட போதே பொலிஸாருடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும் அந்த பொம்மையை எரிக்காமல் பொலிஸாரால் தடுக்கப்பட்டது.

பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடிய பொலிஸார் அவர்கள் அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு இடமளித்திருந்தனர்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க



No comments

Powered by Blogger.