Header Ads

வத்தளையில் 105 இந்திய பிரஜைகள் உட்பட 128 பேருக்கு கொரொனா உறுதி


இலங்கையில் நாளாந்தம் 2000 கொரோனா தொற்றாளர்களும் , சுமார் 50 கொரோனா மரணங்களும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான நிலையில் தற்போது இந்தியாவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி டெல்டா வைரசும் நாட்டில் இனங்காணப்பட்டுள்ளது.

எழுமாறாக எடுக்கப்படும் பி.சி.ஆர்.பரிசோதனைகளில் கூட பெருமளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கின்றனர்.

இவ்வாறு இந்தியாவில் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள டெல்டா வைரஸ் எவ்வாறு இலங்கைக்குள் நுழைந்து என்பது கண்டறியப்படாத நிலையில் வத்தளையில் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் நூற்றுக்கும் அதிகமான இந்திய பிரஜைகள் பலருக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

வத்தளை தொழிற்சாலை

வத்தளை - ஹேக்கித்த பிரதேசத்தில் அமைந்துள்ள இரும்பு தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் 128 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 105 இந்திய பிரஜைகளும் , 23 இலங்கை பிரஜைகளும் உள்ளடங்குவதாக வத்தளை பொது சுகாதார பரிசோதகர் உறுதிப்படுத்தினார்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இவ்வாறு இந்த இரும்பு தொழிற்சாலையில் நூற்றுக்கும் அதிகமானோருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதாகவும் வத்தளை பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டார்.

எனினும் இவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்று இனங்காணப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த சம்பவம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வத்தளை பிரதேசத்தில் இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தந்து தொழில்புரியும் இந்திய பிரஜைகள் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

வத்தளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினால் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய அவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இனங்காணப்பட்ட பின்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இவ்வாறான நிலையில் இன்றைய தினமும் ஆயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இன்று இனங்காணப்பட்ட 1731 தொற்றாளர்களுடன் நாட்டில் 241 420 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டது.

இவர்களில் 207 287 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 31 552 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க



No comments

Powered by Blogger.