Header Ads

காருக்குள் நச்சு, நச்சுனு ஒரே முத்த மழை: ரஷ்மிகாவின் வைரல் போட்டோ

நடிகைகள் நாய்க்குட்டிகள் வைத்திருப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் தான் ஆரா என்கிற தன் செல்ல நாயை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார் ரஷ்மிகா. ஆரா தன்னை முத்தமிடும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் ரஷ்மிகா.

மும்பையில் அவர் ஷாப்பிங் சென்றபோது ஆராவையும் அழைத்துச் சென்றார். காரில் ரஷ்மிகாவை பார்த்த புகைப்படக் கலைஞர்கள் அவரை புகைப்படம் எடுக்க சூழ்ந்தார்கள். அனைவருக்கும் நன்றி தெரிவித்த ரஷ்மிகா, பான்டமிக் நேரத்தில் பத்திரமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அப்பொழுது ரஷ்மிகா மடியில் இருந்த ஆரா அவரை தொடர்ந்து முத்தமிட முன்றது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அமிதாப் பச்சனின் குட்பை இந்தி படத்தில் நடித்து வருகிறார் ரஷ்மிகா. இதற்காக அவர் மும்பையில் தங்கியிருக்கிறார். பாலிவுட் வாய்ப்பு வருவதால் மும்பையில் புது வீடு வாங்கியிருக்கிறார். அந்த வீட்டில் அண்மையில் குடியேறினார். தான் புது வீட்டில் குடியேறிய பிறகு ஆரா சொகுசாக சோஃபாவில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் ரஷ்மிகா.
 


அதை பார்த்த ரசிகர்கள் அவர் மேலும், மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று வாழ்த்தியுள்ளனர்.

குட்பை அவரின் இரண்டாவது இந்தி படமாகும். சித்தார்த் மல்ஹோத்ராவின் மிஷன் மஞ்னு தான் ரஷ்மிகா ஒப்பந்தமான முதல் பாலிவுட் படம். ரஷ்மிகா இந்தி படங்கள் தவிர்த்து அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்திலும் நடிக்கிறார். சுகுமார் இயக்கி வரும் அந்த படத்தில் ரஷ்மிகா தான் ஹீரோயின்.

No comments

Powered by Blogger.