Header Ads

அய்யோ, எலும்பெல்லாம் தெரியுதே, காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு?: ரசிகர்கள் அதிர்ச்சி

 

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் பலருக்கும் பிடித்த நடிகை ஆவார். ரசிகர்களுக்கு மட்டும் அல்ல பல ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கும் பிடித்த நடிகை.

படப்பிடிப்பு தளத்தில் பந்தா காட்டாமல் இருப்பதால் திரையுலகினர் அவரை கொண்டாடுகிறார்கள். காதலர் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி தன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் காஜல். இந்நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

அதற்கு காரணம் அவர் அநியாயத்திற்கு ஒல்லியாக இருப்பது தான். அவரின் கால்களை பார்த்த ரசிகர்களோ, என்னமா காஜு, எலும்பு தான் இருக்கு, உடம்புக்கு முடியவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏற்கனவே ஒல்லியாக இருந்த காஜல் மேலும் ஒல்லியானது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

காஜலுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. இதையடுத்து அவர் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று காஜலின் தங்கை நிஷா அகர்வால் விரும்புகிறார்.

இது குறித்து நிஷா கூறியதாவது,

காஜல் விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு சுயநலமான காரணங்கள் உள்ளது. சீக்கிரமாக தாயாகு என்று அவருக்கு திருமணமானதில் இருந்து கூறி வருகிறேன்.

காஜல் குழந்தை பெற்றுக்கொள்வதில் தாமதமானால் அந்த பிள்ளைக்கும், என் மகனுக்கும் இடையேயான வயது வித்தியாசம் அதிகமாக இருக்கும். அதனால் என் மகன், காஜலின் பிள்ளையுடன் நெருக்கமாக இருக்க மாட்டான். அவனுக்கு ஏற்கனவே 3 வயதாகிவிட்டது. அதனால் காஜலும், கவுதமும் விரைவில் பெற்றோராக வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.