காதலித்து துரோகம் செய்த நடிகர்: நடிகை அதிரடி முடிவு
திரையுலகை சேர்ந்த யாரையும் காதலிக்க மாட்டேன் என்று பிரபல பாலிவுட் நடிகை மினிஷா லம்பா தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை மினிஷா லம்பா நடிகை பூஜா பேடியின் உறவினரான ரயன் தாமை இரண்டு ஆண்டுகள் காதலித்து 2015ம் ஆண்டில் திருணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர்கள் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றனர். ரயனை பிரிந்த பிறகு மினிஷா லம்பா வாழ்வில் மீண்டும் காதல் வந்திருக்கிறது. ஆனால் அந்த நபர் திரையுலகை சேர்ந்தவர் இல்லையாம். இந்நிலையில் காதல் பற்றி மினிஷா பேட்டி அளித்திருக்கிறார்.
நான் நடிகர்கள் மட்டும் அல்ல திரையுலகை சேர்ந்த யாரையும் டேட் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அதற்கு காரணம் இருக்கிறது. அவர்களை சுற்றி டெம்ப்டேஷன் இருந்து கொண்டே இருக்கும்.
நிறைய பேர் நடிகர்களை காதலித்து வருகிறார்கள். அதனால் யாரையும் காயப்படுத்தும் வகையில் நான் எதுவும் கூற விரும்பவில்லை. இது நான் எடுத்த முடிவு என்கிறார் மினிஷா லம்பா.
மினிஷா நடிக்கும் ஆசையில் மும்பைக்கு வந்தபோது கையில் அவ்வளவாக பணம் இல்லாததால் ரூ. 5 ஆயிரத்திற்கு விடுதி ஒன்றில் தங்கியிருந்திருக்கிறார். அப்பொழுது அந்த விடுதி உரிமையாளர் பெண் தன் பணத்தை மினிஷா திருடிவிட்டதாக புகார் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து மினிஷா அந்த விடுதியை விட்டு வெளியேறினார். அதன் பிறகு உரிமையாளர் தான் வைத்த இடத்தில் பணம் இருந்ததை பார்த்துவிட்டு மினிஷாவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
No comments