Header Ads

சடுதியாக அதிகரித்த கோதுமை மா விலை !


பிரீமா நிறுவனம் மானது மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் கோதுமை மாவின் விலையை விலையை சடுதியாக அதிகரித்துள்ளது. இவ் விலை அதிகரிப்பு நேற்று முதல் அமுலாகியுள்ளது.

இதற்கமைய ரொட்டிக்கான கோதுமை மா ஒரு கிலோகிராம் 4 ரூபாவினாலும், பிஸ்கட் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் கோதுமை மா ஒரு கிலோகிராம் 6 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரீமா நிறுவனத்தின் வர்த்தக பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் , ரொட்டிக்கான கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் கொத்து,பரோட்டா போன்ற உணவுவகைகளினதும் பிஸ்கட்வகைகளினதும் விலைஅதிகரிப்பதற்கான வாய்ப்புகள் கூடியளவு காணப்படுகின்றன.

மா அதிகரிப்பிற்கான காரணமாக உலக சந்தையில் மாவின் வகைகளின் விலை அதிகரித்தமையினால் உள்நாட்டிலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை விலை அதிகரிப்புக்கானகோரிக்கைமுன்வைக்கப்பட்டுள்ள போதிலும் பிரீமா நிறுவனத்திற்கு அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என நுகர்வோர் பாதுகாப்புஇராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.