சர்ச்சையில் சிக்கிய சஜித் அணி பெண் உறுப்பினர்?
கொழும்பு பிரபல ஹோட்டலில் அண்மையில் நடந்த சந்திமால் ஜயசிங்கவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் பயணக்கட்டுப்பாட்டு சட்டங்களை மீறி கலந்துகொண்டவர்களில் மேலும் 06 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களிடையே சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் திவுலப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினரான பாகேஸ்வரி குணசேகர மற்றும் அவரது கணவரான சமல் சுஷாந்த ஆகியோம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அதனை மூடிமறைக்க பிரதேச சபை உறுப்பினரான மதுஷிகா குணசேகரவின் பெயரிலும், அவரது கணவராக சமல் சுஷாந்தவும் பிரசன்னமாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 30 ஆம் திகதி தனிமைப்படுத்தல் மற்றும் பயணக்கட்டுப்பாட்டுச் சட்டங்களை மீறி குறித்த ஹோட்டலில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் பிரபல நடிகை பியுமி ஹன்சமாலி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் இருவரும் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments