Header Ads

இலங்கையில் புதிய திருமண தம்பதிகளிற்கு அரசின் அறிவிப்பு

இலங்கையில் பதிவுத் திருமணங்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது திருமணப்பதிவு சட்டத்தின் அடிப்படையில் நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பதிவாளர் அலுவலகம் அல்லது வெளியிடங்களில் விவாகப் பதிவு செய்வதற்கான கட்டணம் 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்ற திருமணத்துக்கான கட்டணம் 750 ரூபாயில் இருந்து 900 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விவாகப் பதிவுக்கான பதிவாளர் உறுதிச்சான்றை வழங்குவதற்கான கட்டணம் 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



 

No comments

Powered by Blogger.