பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி
பாடசாலைகள் மீளத் திறக்கப்பட முன்னர் அனைத்து பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்க கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது.
இதன்படி மாணவர்களுக்கு அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை அளிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சுகாதார அமைச்சு மற்றும் உயரதிகாரிகளிடம் கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இறுதிமுடிவு இன்னும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை வருகின்ற ஜுலை மாதத்தில்தான் பைசர் தடுப்பூசியின் ஒருதொகை இலங்கைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments