Header Ads

தமிழர் பகுதியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட காலவாதியான மாத்திரைகள்!


 வவுனியாவின் சில பகுதிகளில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு குடும்ப நல உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட இரும்புச்சத்து மாத்திரைகள் காலவாதியாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர் ஒருவரின் முகநூல் பதிவில் குறித்த விடயம் பதிவிடப்பட்டிருந்த நிலையில், மற்றொருவர்  தனது மனைவிக்கு வழங்கியிருந்த மாத்திரைகளை எடுத்து பார்த்தபோது அவையும் காலவாதியாகியுள்ளமையை அறிய முடிந்ததாக பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில்   நாட்டில் ஒருபக்கம் கொரோனா அச்சம் காரணமாக முறையாக மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்லமுடியாமல் தவிக்கும் கற்பினித் தாய்மாருக்கு இவ்வாறான காலாவதியான மாத்திரைகளையும் வழங்கி பிறக்கப்போகும் குழந்தைகளின் வாழ்க்கையோடு விளையாடியுள்ள பொறுப்பற்ற உத்தியோகத்தர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்[பட்டுள்ளது.

அத்துடன்   ஏற்கனவே இறம்பைக்குளம் போன்ற பகுதிகளில் தமிழ் பேசத் தெரியாத பெரும்பான்மையின உத்தியோகத்தர்களை நியமித்துள்ள நிலையில் இதுவரை குழந்தைகளுக்கான திரிபோசாவில் ஊழல் செய்த இவர்கள் தற்போது மாத்திரைகளிலும் தமது கைவரிசையை காட்டியுள்ளதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இது உத்தியோகத்தர்களின் தவறா ? அல்லது மேலதிகாரிகளின் தவறா? அல்லது அனைவரும் இணைந்த கூட்டு செயற்பாடா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில் உரியவர்கள் கவனமெடுக்காவிடில் பாரிய விளைவுகளை சந்திக்கவேண்டிவரும் எனவும்  குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கர்ப்பிணித்தாய்மார் தமக்கு வழங்கப்படும் மாத்திரைகளை ஒரு தடவை நன்றாக பரிசோதித்து உட்கொள்வது நல்லது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளனர்.




🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.