Header Ads

மணமேடையில் மணப்பெணிற்கு நேர்ந்த பெரும் சோகம்

திருமணத்தின்போது மாரடைப்பினால் மணப்பெண் இறந்ததை அடுத்து, நல்லநேரத்தில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக மணப்பெண்ணின் தங்கையை குறிப்பிட்ட மணமகனுக்கு திருமணம் செய்துவைத்த சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உத்தரபிரதேசம் எட்டவா என்ற இடத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் திருமண நாளன்று, மாலை மாற்றிய கையோடு மணப்பெண் மணமேடையில் மாரடைப்பினால் விழுந்திருக்கிறார்.

மருத்துவர்கள் உடனடியாக அழைக்கப்பட்டபோதும் மணமகளை காப்பாற்ற முடியவில்லை. இதனையடுத்து, என்ன செய்வது என்று இரு வீட்டாரும் கலந்து ஆலோசித்தபோது, நல்ல நேரத்தை தவறவிடக்கூடாது என்பதாலும் இரண்டு குடும்பங்களுக்கு இடையிலும் ஆரம்பித்துவிட்ட உறவு அறுந்துவிடக்கூடாது என்ற காரணத்தினாலும் மணமகளின் தங்கையை குறிப்பிட்ட மணமகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு பெரியோர்கள் முடிவெடுத்தனர்.

இறந்த பெண்ணின் சடலத்தை திருமண வீட்டில் இன்னொரு அறையில் வைத்துவிட்டு, அவரது தங்கையை உடனடியாக தயார்செய்து திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது.

இது தொடர்பாக பெண் வீட்டார் கருத்து தெரிவித்தபோது – “உண்மையிலேயே கஷ்டமான முடிவாகத்தானிருந்தது.

ஆனால், முறை பிசகிவிடக்கூடாது என்பதற்காக பெண்ணின் சடலத்தை ஒரே வீட்டில்வைத்துக்கொண்டு, திருமணத்தையும் முடித்து வைக்க வேண்டியதாயிற்று” என்று கூறியுள்ளனர்.


🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



 

No comments

Powered by Blogger.