Header Ads

இந்த இரண்டு நோய்களுக்கும் ஒரே அறிகுறி- நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!

டெங்கு மற்றும் கொவிட் நோய்கள் ஒரே மாதிரியான நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தக் கூடியவை என தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தை விட இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், சீரற்ற வானிலையால் எதிர்வரும் சில வாரங்களில் நோயாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார். 

இதனால் நோய் அறிகுறிகள் தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்குமாறும், தேவையற்ற மருந்துகளை பயன்படுத்தாமல் நோய் அறிகுறிகள் தென்படும் முதல் சந்தர்ப்பத்திலேயே வைத்தியர் ஒருவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் டெங்கு நோய்க்கான சிகிச்சை பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியினுள் வீடு மற்றும் சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்வதும் மக்களின் பொறுப்பு என வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் தற்போது கொவிட் ஒழிப்பு நவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பில் முழுமையாக கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க

 

No comments

Powered by Blogger.