புலனாய்வுத்துறைக்கு கிடைத்த இரகசியத் தகவல்! உடனடியாக கைது செய்யப்பட்ட எழுவர்
சிலாபம் ஹலாவத- ரம்பேபிட்டிய பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 7 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாாபம் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அரச்சிகட்டுவ, பல்லம மற்றும் பங்கதெனிய பகுதிகளில் வசிக்கும் 20 முதல் 57 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட எழுவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments