Header Ads

இந்த மீனின் விலை ரூ2 கோடி.... ஏன் தெரியுமா?

 மீன்கள் விலை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலை இருக்கும். அந்த மீன்கள் எல்லாம் அது கிடைக்கும் தன்மைக்கு ஏற்ப விலை இருக்கும் ஆனால் இந்த மீனின் ஒரு மீனே ரூ2 கோடிக்கு அதிகமாக விற்பனையாகிறது. இது குறித்து காணலாம் வாருங்கள்.

அரோவானா மீன்

தென் அமெரிக்காவில் உள்ள அமேசான், கயானா மற்றும் ஓயாபோக் என்ற ஆறுகளில் வாழும் மீன் தான் அரோவானா ஏன் இந்த ஆறுகளில் மட்டும் இந்த மீன் வாழ்கிறது என்றால் இந்த மீன் நல்ல தண்ணீரில் மட்டும் தான் வாழும் உப்பு தண்ணீரில் இந்த மீனால் வாழ முடியாது. இந்த ரக மீன்ள் நீரில் மேல் மட்டத்தில்தான் வாழும் ஆழம் வரை எல்லாம் செல்லாது.

​ராசி மீன்


உப்பு தண்ணீரில் இந்த மீன் இருந்தால் சில நிமிடங்களில் இறந்துவிடும். அந்த அளவிற்கு இந்த மீனிற்கும் உப்பு தண்ணீருக்கும் ஆகாது. இந்த மீனை மக்கள் வீட்டில் வளர்ப்பதற்கும் விரும்புவார்கள். இந்த மீன் வீட்டிலிருந்தால் வீட்டில் நல்ல வருமானம் கிடைக்கும், பணம் மட்டுமல்லாமல் சொத்தும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை

​ஆண் மீன்கள்



இந்தவகை மீன்களில் பெண் மீன்கள் முட்டையிட்டாலும் ஆண் மீன்கள் தான் அந்த முட்டையை பாதுகாக்கும். பெண் மீண்கள் முட்டையிட்டதும் அதை ஆண் மீன்கள் வாயில் எடுத்துக்கொள்ளும் அடுத்த 50 நாட்களுக்கு ஆண் மீன் வாயை திறக்கவே திறக்காது 50 நாட்களுக்கு உணவும் சாப்பிடாது. தனியாக நீரில் மெதுவாக நீந்திக்கொண்டே இருக்கும்.

​50 நாட்கள்


குறிப்பிட்ட அந்த 50 நாட்களுக்கு தேவையான உணவை பெண் மீன்கள் முட்டையிடும் முன்பே சாப்பிட்டு உடலில் சேமித்து வைத்துக்கொள்ளும். அந்த 50 நாட்களுக்கு பிறகு அதன் வாயில் உள்ள முட்டைகள் பொறிந்து எப்பொழுது குஞ்சு மீன்கள் வெளியில் வருகிறதோ அப்பொழுது தான் அந்த ஆண் மீன் வாயை திறக்கும்.

​விலை


இந்த ரக மீன் சுமார் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை, இது சுமார் 120 செ.மீ வரை வளரும் அதே நேரத்தில் 5 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். இந்த மீன்கள் சந்தையில் சுமார் ரூ1 கோடி வரை விற்பனையாகிறது. கள்ள சந்தையில் இந்த மீனிற்கு ரூ2 கோடிவரை விலை உள்ளது.

​அசைவம்


இந்த மீன் அசைவம் சாப்பிடும் மீன் அதாவது, புழு, பூச்சி, சிறிய ரக வண்டுகள், சிறிய மீன்கள், தவளைகள், இறால்கள் போன்றவற்றை உணவாக சாப்பிடும். இந்த ரக அசைவ உணவை தான் இந்த மீன் விரும்பி சாப்பிடும். சைவ உணவுகளை சாப்பிடும் என்றாலும் அந்த அளவிற்கு விரும்பி சாப்பிடாது.

​பறக்கும் மீன்


இந்த மீன்கள் சில நேரம் தண்ணீருக்கு மேல் எகிறி குதிக்கும் குணம் கொண்டவை. தண்ணீருக்கு மேல சுமார் 5 அடி உயரம் பறக்கும் குணம் இந்த மீனிற்கு உள்ளது. அதனால் இந்த மீனை வீட்டில் தொட்டியில் போட்டு வளர்ப்பவர்கள் இதை கவனத்தில் கொண்டு தொட்டிக்கு மேலே சுமார் 5 அடி இடைவெளி விட்டு மூடி அமைப்பாளர்கள். அப்பொழு தான் மீன் தண்ணீரிலிருந்து வெளியில் குதிக்காமல் இருக்கும். இந்த மீன்கள் தெற்காசிய பகுதிகளில் அதிகம் தொட்டியில் வளர்க்கும் மின்களாகவே இருக்கிறது.

No comments

Powered by Blogger.