Header Ads

பயணத்தடை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கப்படுமா?


 நாட்டில் கொரோனா பயணக்கட்டுப்பாடுகளை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் தீர்மானத்தை எடுக்க நேரிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் கூறினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் அந்தக் கட்டுப்பாடுகள் பாரிய அளவில் மீறப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இந்த நிலைமை தொடரும் நீடிக்கும் பட்சத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாடுகளை நீடிப்பதைத்தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார்.

எனினும் இந்தப் பயணக்கட்டுப்பாட்டுக் காலத்தில் ஓரளவுக்கு கொரோனா தொற்றாளர்கள் குறைந்திருப்பதாகவும் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க

No comments

Powered by Blogger.