முககவசம், சமூக இடைவெளியின்றி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற 11,000 மாணவர்கள்! எங்கு தெரியுமா?
உலம மக்களை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவின் வுஹான் நகரில் 18 மாதங்களுக்குப் பிறகு, 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் முககவசம் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான வுஹானில் தான் உலகின் முதல் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்நிலையில் தற்போது உலகமே கொரோனா தொற்று பீதியில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், ஊரடங்கு மற்றும் பொதுமுடக்கத்தையும் அறிவித்து நடைமுறைப்படுத்திவரும் சூழல்நிலையில், சீனாவின் உகான் நகரில் முககவசம் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் பட்டமளிப்பு விழாவில் 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றதை காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
மத்திய சீனாவின் நார்மல் பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments