Header Ads

இலங்கையில் கிணற்றுக்குள் குழந்தை பிரசவித்த கர்ப்பிணி பெண்!


 கர்ப்பிணிப் பெண் ஒருவர் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் வீழ்ந்த நிலையில் கிணற்றுக்குள் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று றம்புக்கன பத்தாம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண் வீட்டில் காணப்படாமையையடுத்து அவரது உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர்.

இதன்போது தமது வீட்டுத் தோட்டத்துக்கு கீழே உள்ள கிணற்றில் அவர் வீழ்ந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டபோது அவருக்கு கிணற்றுக்குள் குழந்தை பிரசவமானது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கிணற்றை துப்பரவு செய்து தேடியபோது சிசு மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க

No comments

Powered by Blogger.