நாட்டில் மேலும் பல கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன
நாட்டின் மேலும் சில கிராம சேகவர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி ஜெனரால் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பு - கொலன்னாவை காவல்துறை அதிகார பிரிவிற்குட்பட்ட சிங்கப்புர கிராம சேவகர் பிரிவின் சன்ஹிந்தசெவன குடியிருப்பு தொகுதியை தவிர்ந்த ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தின் களனி கல்பொரல்ல 100ம் தோட்ட கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை காவல்துறை அதிகார பிரிவிற்குட்பட்ட கலுதமுத, ஹப்புகஸ்தலாவ, வீரபுர மற்றும் பஹல கொரகஒயா ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தின் பியகம காவல்துறை அதிகார பிரதேசத்திற்கு உட்பட்ட பொல்ஹேன வீதி மற்றும் லேக்வீவ் வீதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கம்பஹா - மீகஹவத்த காவல்துறை அதிகார பிரிவின் சியம்பலாபேவத்த கிராம சேவகர் பிரிவு தவிர்ந்த ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, மட்டக்களப்பு - வாழைச்சேனை காவற்துறை அதிகார பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலை பதூரியா, மீராவோடை கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், அம்பாறை - சம்மாந்துறை - புதிய வலத்தாபிட்டி கிராமம் காலி - கோனகல கிராம சேவகர் பிரிவின் பொல்துவ கிராமம் என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
No comments