Header Ads

264 நாட்களாக ஒரே ஆடை அணிந்து மீட்டிங்கில் கலந்து கொண்ட பெண்... - வைரலாகும் வீடியோ


தற்போது கொரோனா பரவில் வெளியானதிலிருந்து மக்கள் எல்லோரும் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி தங்கள் பணியை மாற்றிக்கொண்டனர். இந்த செய்தியை படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் வீட்டிருந்தே தான் உங்கள் பணியை செய்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறோம். இப்படியாக வீட்டிலிருந்து பணி செய்பவர்கள் அவ்வப்போது நிறுவனத்துடன் கனெக்டில் இருக்க 
வீடியோ கால் மீட்டிங் நடத்துகிறார்கள். அந்த நிறுவனம், அவரவர் வேலைக்களை பொறுத்து இந்த மீட்டிங்கள் நடக்கிறது. சிலருக்கு தினமும் மீட்டிங் நடக்கிறது. சிலருக்கு அவ்வப்போது, சிலருக்கு வாராவாரம் என மீட்டிங் நடக்கிறது.

இப்படியாக ஜெம் என்ற பெண் இப்படியாக கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார். இவர் அலுவலகத்தில் அவ்வப்போது மீட்டிங்கள் இருக்கும் பெரும்பாலும் தினமும் மீட்டிங் இருக்கும். இந்நிலையில் முதல் மீட்டிங் 2020 ஏப் 2ம் தேதி நடந்திருக்கிறது. அப்பொழுது அவர் ஒரு ஹாவாய் டைப்பில் உள்ள நீல நிறத்தில் பூ போட்ட சட்டையை போட்டு அந்தமீட்டிங்கிற்கு வந்துள்ளார்.
 

அதன் பின் நடந்த ஒவ்வொரு ஆன்லைன் மீட்டிங்கிற்கும். அவர் அதே சட்டையில் தான் வந்து மீட்டிங் அட்டெண்ட் செய்துள்ளார். ஆனால் இதை யாரும் கண்டுபிடிக்கவேயில்லை. இந்நிலையில் அவருக்கு வேறு ஒரு இடத்தில் பணி கிடைத்தன் காரணமாக அவர் தற்போது உள்ள நிறுவனத்தின் கடைசி நாளில் இருந்தார் அன்றைய மீட்டிங்கில் அவருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் அவர் தான் கடந்த 15 மாதங்களாக தினமும் ஒரே டிரெஸ்ஸில் தான் மீட்டிங்கிற்கு வருவதாகவும், இதுவரை 264 மீட்டிங் இது போல வந்திருப்பதாகவும் கூறினார் இதை கேட்ட மற்றவர்களுக்கு பெரிய ஷாக்காக இருந்தது. இதுவரை யாரும் அவரது இந்த ஸ்டைலை கண்டுபிடிக்கவில்லை. இதைஅவர் தனது டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ யூடியூபிலும் வந்துள்ளது.


இந்த வீடியோ பலரை ரசிக்க வைத்துள்ளது. பலர்இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். பலர் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். நீங்கள் உங்கள் வாழ்வில் வீட்டிலிருந்தே பணியாற்றும் அனுபவம் குறித்த சுவாரஸ்யமான சம்பவங்களை இங்கே சொல்லுங்கள்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க

 

No comments

Powered by Blogger.