Header Ads

சீன - இந்திய உறவை கையாள்வது எப்படி? ஜனாதிபதியின் நிலைப்பாடு வெளியானது



இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் தமது அரசாங்கம் மேற்கொள்ளாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடுகளின் நலன்களுக்காக இந்து சமுத்திரம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய இந்தியா மற்றும் ஏனைய பிராந்திய நட்பு நாடுகளுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று முற்பகல் ஆரம்பமான 'ஆசியாவின் எதிர்காலம்' குறித்த 26 ஆவது சர்வதேச மாநாட்டில் காணொளிக் காட்சி தொழிநுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றினார்.

இதன்போது ஒரு தெற்காசிய நாடு என்ற வகையில் சீனா மற்றும் இந்தியாவுடனான உறவை எவ்வாறு சமமாக பேணுவீர்கள் என எழுப்பட்ட கேள்விக்கு ஜனாதிபதி இவ்வாறு பதிலளித்தார்.

சீனாவுடனான எங்கள் ஒத்துழைப்பு எமது ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் வர்த்தகப் பாதைகளுக்கு இணையாக உள்ளது. பல நாடுகளைப் போலவே சீனாவும் இலங்கைக்கு ஒரு முக்கிய முதலீட்டு பங்காளியாக இருந்து வருகிறது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற வகையில் எமது அபிவிருத்தி அபிலாஷைகளை விரைவாகக் கண்காணிக்கவும் எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அனைத்து பங்காளர் நாடுகளின் ஆதரவைப் பெற இலங்கை விரும்புகிறது. ஆசிய நாடுகள் மற்றும் தொலைதூர நாடுகளுடனான எங்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்த தனது அரசு ஆர்வமாக உள்ளது.

உலக அதிகார போட்டிகள் மற்றும் பிராந்திய சக்தி இயக்கவியல் பற்றி நாம் அறிந்திருக்கும் நிலையில், எமது வெளியுறவுக் கொள்கை நடுநிலையானது.

இந்தியாவை எங்கள் நெருங்கிய அண்டை நாடாகவும், நீண்டகால நண்பராகவும் நாங்கள் கருதுகிறோம் - அவர்களின் பாதுகாப்புக் கரிசனைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்க இலங்கையைப் பயன்படுத்த யாரையும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

அனைத்து நாடுகளின் நலனுக்காக இந்து சமுத்திரம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய இந்தியா மற்றும் அனைத்து பிராந்திய பங்காளிகளுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



 

No comments

Powered by Blogger.