சீனாவிடமிருந்து 14 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு
சீனாவிடமிருந்து 14 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசியை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, அதில் ஒரு தொகுதியான 3 இலட்சம் தடுப்பூசிகளை ஒரு மாதத்துக்குள் இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என,கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் அறிவித்துள்ளது.
அத்துடன் சீனாவால் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ள 5 மில்லியன் தடுப்பூசிகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை இலங்கைக்கு கிடைக்கவுள்ளதெனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேலதிக தடுப்பூசிகளை சீனாவிலிருந்து கொள்வனவு செய்வது குறித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் சீனத்தூதுவருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (19) இடம்பெற்றதாகவும் கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments