பஷில் ராஜபக்சவிற்கு முக்கிய பொறுப்பு? கொழும்பு போர்ட் சிட்டியால் கிடைக்கும் பதவி ?
நிறைவேற்றப்பட்டுள்ள போர்ட் சிட்டி சட்டமூலத்தின் பிரகாரம், போர்ட் சிட்டி ஆணைக்குழுவின் முதலாவது பணிப்பாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக அவரை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் 91 மேலதிக வாக்குகளால் கொழும்பு போர் சிட்டி சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, போர்ட் சிட்டி ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளதோடு முதலீடுகளும் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சூழ்நிலையிலேயே இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலுள்ள முதலீட்டாளர்களை தொடர்புபடுத்தவும், ஈர்ப்பதற்கும் பஷில் ராஜபக்ஷவுக்கு திறமை இருப்பதாக சுட்டிக்காட்டிவரும் அரச உயர்பீடம், ஆணைக்குழுவின் முதல் பணிப்பாளராக அவரை நியமிப்பதற்கும் கலந்துரையாடியிருப்பதாகவும் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் பஷில் ராஜபக்ச தற்போது அமெரிக்கா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இது தொடர்பான தகவல்கள் எதனையும் அரசாங்கமோ பஷில் ராஜபக்சவோ வெளியிடவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments