கொரோனாவை கட்டுப்படுத்த ரணில் கூறும் புதிய ஆலோசனை
நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் புதிய செயற்றிட்டங்களை வகுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று அச்ச நிலைமை தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு 3 கோடி தடுப்பூசிகள் தேவையாக உள்ள போதிலும், அதனை இந்த வருட இறுதிக்குள் தருவிப்பது சிரமம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முதலாவது அஸ்ட்ராஸெனேகா கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசாங்கம் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும், நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த வருட இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று உரிய நடவடிக்கைகளை பொருத்தமான காலப்பகுதிக்குள் மேற்கொள்வது அவசியம் என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தைக் காரணம் காட்டி மக்களின் வாழ்க்கையைப் பலியிட வேண்டாம் எனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அந்நிய செலாவணி குறித்து மாத்திரம் சிந்தித்து இந்திய சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வந்தமையினால், கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரித்தது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாட்டை முடக்குவது குறித்தும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும், அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, ஜனாதிபதியும், அமைச்சரவையும் தீர்மானிக்க வேண்டும் என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments