வவுனியாவில் இந்த வயதினரிடையே அதிக அளவில் தொற்று உறுதி!
வவுனியா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே 20 ஆம் திகத வரையான காலப்பகுதியில் 655 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் இளவயதினை சேர்ந்தவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வவுனியா சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவில் 544 பேரும், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் 54 பேரும், வவுனியா தெற்கில் 23 பேரும், செட்டிகுளம் பிரிவில் 34 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களில் 19 வயதிற்குட்பட்ட 50 தொற்றாளர்களும், 19 தொடக்கம் 30 வயதிற்கிடைப்பட்ட வயதுடைய 273 தொற்றாளர்களும், 31 தொடக்கம் 40 வயதிற்குட்பட்ட 131 தொற்றாளர்களும், 41 வயதிற்குமேற்ப்பட்ட 197 தொற்றாளர்களும் இனம்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் ஒருவரும், இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் 6 பேர் என மொத்தம் 7 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments