இரண்டு மாதங்களில் இலங்கையில் உற்பத்தியாகிறது கொவிட் தடுப்பூசி
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் விளைவாக அடுத்த இரண்டு மாதங்களுக்குள் உள்நாட்டில் சினோவாக் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க அரசாங்கம் தயாராக உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
சீனாவிலிருந்து இன்று அதிகாலை சுமார் 5 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வந்தடைந்தன. இவற்றை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சருடன் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவும் சென்றார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் உள்நாட்டு நிறுவனமொன்று இந்த சிநோவெக் சீனத்தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை கோரியதாகவும் அவர் கூறினார்.
பெரும்பாலும் அடுத்துவரும் இரண்டு மாதங்களில் சீனத்தடுப்பூசி கண்டி – பல்லேகலையில் உள்ள தொழிற்சாலையொன்றில் உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments