இனி முக்கவசம் அணியத்தேவை இல்லை - தென் கொரிய அரசாங்கம் அறிவிப்பு
COVID-19 தடுப்பூசியின் ஒரு டோஸை பெற்றவர்களும் இனி முக்கவசம் அணியத்தேவை இல்லை என தென் கொரிய அரசாங்கம் இன்று அறிவித்தது.
COVID கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கிம் பூ-க்யூம் இதை குறிப்பிட்டார்.
தடுப்பூசியின் ஒரு டோஸ் பெற்றவர்களும் ஜூன் முதல் பெரிய கூட்டங்களில் ஒன்று சேர முடியும் என்றார்.
தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் ஒக்டோபரில் மறுபரிசீலனை செய்யப்படும் என்றார்.
தென் கொரியா52 மில்லியன் மக்கள் தொகையில் குறைந்தது 70% பேருக்கு செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி 7.7% மக்களுக்கு ஒரு டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments