கடுமையான முடிவுகளை எடுத்துள்ள கோட்டாபய - நாமல் வெளியிட்ட தகவல்
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் கொரோனாவை கட்டுப்படுத்தும் குழுவின் பரிந்துரைகளின் படி கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூறினார்.
குருநாகல் மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்யும் போதே அமைச்சர் இதை தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த கடுமையான நடவடிக்கைகளால் கொரோனாவின் மூன்றாவது அலையை மிக விரைவாக வெற்றிகொள்ள முடியும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் பிற பகுதிகளிலும் தடுப்பூசி போட வேண்டிய அனைவருக்கும் கூடிய விரைவில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments