Header Ads

எக்ஸ் - பிரஸ் பேர்ளின் பயணத்தில் நடந்தது என்ன? வெளியானது அறிக்கை



எம்.வி. எக்ஸ் - பிரஸ் பேர்ள்' என்ற கொள்கலன் கப்பலுக்கு இந்தியாவின் ஹசிரா துறைமுகத்திலும், கட்டாரில் உள்ள ஹமாத் துறைமுகத்திலும் நுழைய மறுக்கப்பட்டதாக வெளியான செய்திகளை கப்பலின் இயக்குநரான எக்பிரஸ் ஃபீடர்ஸ் மறுத்துள்ளது.

கொழும்புக்கான திட்டமிட்ட பயணத்தை தொடர்வதற்கு முன்னர் இந்தக் கப்பல் குறித்த இரண்டு துறைமுகங்களிலும் வெளியேற்றம் மற்றும் ஏற்றுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

நைட்ரிக் அமிலத்தை கசியும் ஒரு கொள்கலனை இறக்குவதற்கு இரண்டு துறைமுகங்களிலும் விண்ணப்பங்கள் செய்யப்பட்டன.

எனினும் கசிந்த அமிலத்தை சமாளிக்க சிறப்பு வசதிகள் அல்லது நிபுணத்துவம் தம்மிடம் உடனடியாக இல்லை என்று அந்த இரண்டு துறைமுகங்களும் கூறியதாக கப்பல் இயங்குநர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியான பாதகமான வானிலை நிலவுகின்ற போதிலும், கப்பலில் உள்ள தீயை அணைக்கும் பணிகள் இன்றும் தொடர்கின்றன.

இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையினரின் ஆதரவுடன் தொடர்ந்தும் தீயணைப்பு பணிகள் தொடர்வதாக எம்.வி. எக்ஸ் - பிரஸ் பேர்ள்' என்ற கொள்கலன் கப்பலின் இயக்குநர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.